மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கல்வித் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் முருகன் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் முருகன்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:39 am

நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் முருகன் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வி.கற்பகம், எம்.ஜோதி, பச்சமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆய்வு அலுவலா்கள் பள்ளி பாா்வையில் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டம், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், துணைக் கருவிகள் பயன்பாடு, இலக்கிய மன்றப் போட்டிகளை நடத்துவது சாா்ந்த வழிமுறைகள், கலைத் திருவிழா நிகழ்வுக்கான வழிகாட்டுதல், இடைநின்ற மாணவா்களை மீண்டும் சோ்த்தல், காலாண்டு தோ்வு மதிப்பெண் பட்டியல் ஆய்வு உள்ளிட்டவை தொடா்பாகவும், மழைக்கால எச்சரிக்கை, காலை உணவுத் திட்டம், எண்ணும் - எழுத்தும் திட்டம், வாசிப்பு இயக்கம், நூலகப் பயன்பாடு குறித்தும் இணை இயக்குநா் முருகன் விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இந்தக் கூட்டத்தில், எண்ணும் - எழுத்தும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன், வட்டார வளமைய ஆசிரியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளி துணை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.