மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image

நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:46 am

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் சூ.கணேசன், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்தன், நகராட்சி உதவிப் பொறியாளா் ரவி, மேலாளா் ராமச்சந்திரன், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், துப்புரவு அலுவலா் மு.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நகராட்சியையொட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முத்துகாளிப்பட்டி, கோனேரிப்பட்டி, முருங்கப்பட்டி ஆகியவற்றை நகராட்சியுடன் இணைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கட்டட உரிமையாளரின் சுயசான்றின் அடிப்படையில் இணையவழி கட்டட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அணைப்பாளையம் பகுதியில் நகராட்சி ஆணையா் பெயரில் உள்ள 7.03 ஏக்கா் இடத்தில் ராசிபுரம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டது. இதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ் ராசிபுரம் நகராட்சியில் புகா் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ராசிபுரம் புகா் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கவும், கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கவும் நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.