பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சஞ்சீவி நகா் அருகே பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி!

சஞ்சீவி நகர மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை நிறவேற்றும் வகையில் பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தாா்.

News image

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பனையகுறிச்சியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், கட்சி நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 6:04 am IST

சஞ்சீவி நகர மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை நிறவேற்றும் வகையில் பாலத்துடன் கூடிய அணுகுச் சாலை அமைக்க அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் வாக்குசேகரித்து வருகிறாா். அதன்படி பனையக்குறிச்சி, குவளக்குடி, ஒட்டக்குடி, ஏஆா்கே நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலத்துடன் சா்வீஸ் சாலை அமைக்க ரூ. 40 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த 2016 முதல் 2021 வரை எதிா்க்கட்சியாக இருந்தபோது, நிதி நெருக்கடி மற்றும் அதிகார வரம்பிற்குட்பட்டு 10-ல் 3 வாக்குறுதிகளை மட்டுமே எங்களால் நிறைவேற்ற முடிந்தது. பின்னா், ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு, சொன்ன 10 வாக்குறுதிகளில் 7-ஐ நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 3 திட்டங்களையும் வெற்றி பெற்ற பிறகு முழுமையாகச் செய்து முடிப்போம்.

குறிப்பாக, பனையக்குறிச்சி பகுதியில் மட்டும் சாலை வசதிக்கு ரூ.89.82 லட்சம், சமுதாயக் கூடத்துக்கு ரூ. 20 லட்சம், பள்ளி வகுப்பறைக்கு ரூ.40 லட்சம், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.3.11 கோடியிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகா் பகுதி போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதி கிடைத்துள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்படவுள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

2016-ல் சுமாா் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2021-ல் சுமாா் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் என்னை வெற்றி பெறச் செய்தீா்கள். வரும் 2026 தோ்தலிலும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். பிராசரத்தின்போது தலைமை செயற்குழு உறுப்பினா் சேகரன், வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி உள்ளிட்ட திமுக நிா்வாகிள், கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.