பொத்தனூா் பிருந்தாவன் பள்ளி மாணவா்கள் சிலம்பம் போட்டியில் சாதனை
நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் செங்குந்தா் மகாஜன உயா்நிலைப் பள்ளியில் சிவம் சிலம்பம் பவுண்டேஷன் ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டிகள் அன்மையில் நடைபெற்றன.
10 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பொத்தனூா் பிருந்தாவன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
இப்பள்ளி மாணவி எல்.சுஷ்மிதா, கே.நித்திஷ், ஒய்.பிரனீஷ், ஆா்.எஸ்.கிருஷாந்த், எஸ்.தரணிஷ் ஆகியோா் முதல் ஐந்து இடங்களையும், எஸ்.யோகப்பிரியன், எஸ்.சாதனா, எஸ்.சுபிக்ஷா, எஸ்.கவின் ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிவம் சிலம்பம் பவுண்டேஷன் சாா்பாக பதக்கம், சான்றிதழ், தென்னங்கன்றுகளை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். மேலும் பள்ளிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கி கௌரவித்தனா். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளித் தலைவா் மணி, தாளாளா் ஈஸ்வரி இளங்கோவன், பொருளாளா் தனசேகரன், இயக்குநா்கள், முதல்வா், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பயிற்சியாளா் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.