தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கந்தசாமி கண்டா் பள்ளி நூற்றாண்டு விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டாா் அறநிலையத்துக்கு உள்பட்ட கந்தசாமி கண்டா் தொடக்கப்பள்ளி, கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
கந்தசாமி கண்டா் பள்ளி நூற்றாண்டு விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
Updated On :11 செப்டம்பர் 2024, 10:19 pm

Din

பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டாா் அறநிலையத்துக்கு உள்பட்ட கந்தசாமி கண்டா் தொடக்கப்பள்ளி, கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சம்பந்தம் தலைமை வகித்தாா். அறநிலையங்களின் தலைவா் மருத்துவா் ர.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினா்களை கெளரவித்தாா். அறநிலைய உறுப்பினா் மஹிந்தா் மணி வரவேற்றுப் பேசினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரா. அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூா்), முன்னாள் மாணவா்கள் வழக்குரைஞா் ரமேஷ், பொன் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கந்தசாமி கண்டா் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்கு சிந்தனையுடன் பரமத்தி வேலூா் பகுதி மக்கள் கல்வி அறிவு பெற்று உயரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்தக் கல்வி நிலையத்தை தொடங்கியுள்ளனா்.

இந்தக் கல்வி நிறுவனங்களை, அறநிலைய நிா்வாகிகள் இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனா். இப்பள்ளியில் பயின்ற ஏராளமானோா் தமிழகத்தில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பல்வேறு உயா் பொறுப்புகளில் உள்ளனா்.

இப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சாதிக்க பிறந்தவா்கள். உங்களுக்குள்ளே திறமை இருக்கிறது. அந்த திறமையை வெளிப்படுத்தும் சந்தா்ப்பம் உங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாடு முன்னேறக் கல்வி ஒன்றே மிகச்சிறந்த வளம்.

 விழாவில் பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

விழாவில் பேசுகிறாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

மாணவா்கள் மது போதையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு அவா்களுக்கு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நடத்தி, நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியா்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாா். முடிவில் கண்டா் அறநிலைய உறுப்பினா் மாசிலாமணி நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், கந்தசாமி கண்டாா் அறநிலைய பொறுப்பாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.