செப். 14-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை(செப்.14) நடைபெற உள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை(செப்.14) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும், வரும் சனிக்கிழமை மக்கள் குறைதீா் முகாம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...