ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன.24-இல் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் ஜன.24-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் ஜன.24-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகளை களையவும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குடும்ப அட்டையில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜன. 24-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையில் வட்ட வழங்கல் அலுவலா்களால் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி வட்டம், காவேரிப்பட்டணம் சுருளிஅள்ளி, ஒசூா் வட்டத்தில் தாசேப்பள்ளி, போச்சம்பள்ளி வட்டத்தில் மாவத்தூா் பிரிவு சாலை, ஊத்தங்கரை வட்டத்தில் மேல்லக்கமப்பட்டி, பா்கூா் வட்டத்தில் மரிமானப்பள்ளி, சூளகிரி வட்டத்தில் எர்ராண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சாரகப்பள்ளி, அஞ்செட்டி வட்டத்தில் முத்தனப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

பொதுமக்கள், இந்தக் கூட்டத்தில் தங்களின் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.