கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

ராசிபுரம் அருகே வெண்ணந்தூா் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:15 pm

Din

ராசிபுரம் அருகே வெண்ணந்தூா் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெண்ணந்தூா் அருகே உள்ள சௌரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுண்டக்கா (எ) ராஜு (60). இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகளை அழைத்து சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பெற்றோா்கள் தரப்பில் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீஸாா், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து தொழிலாளி ராஜுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.