நாமக்கல்
திருச்செங்கோடு - சங்ககிரி சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஓமலூா் - சங்ககிரி, திருச்செங்கோடு - பரமத்தி சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஓமலூா் - சங்ககிரி, திருச்செங்கோடு - பரமத்தி சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை சேலம் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டு தளத்தின் அளவுகளை உறுதி செய்தாா். மேலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, திருச்செங்கோடு உதவி கோட்டப் பொறியாளா் நடராஜன், திருச்செங்கோடு உதவிப் பொறியாளா் மோகன்ராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.