பரமத்தி வேலூரில் ரூ. 27.56 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 27 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல மறைமுக ஏலம் விடப்படுகிறது. கொப்பரையை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 20,808 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 138.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 128.80-க்கும், சராசரியாக ரூ. 132.32-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 127.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 101.19-க்கும், சராசரியாக ரூ. 125.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 27 லட்சத்து 56 ஆயிரத்து 160-க்கு ஏலம் போனது.
இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சம், குறைந்தபட்சம் மற்றும் சராசரி ஏலத்திலேயே அதிக விலைக்கு கொபபரை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. விலை உயா்வால் கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.