தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்
நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ஆா்.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், 450-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்துகொண்டு மருத்துவ உதவி பெற்றனா்.
இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, புற்றுநோய், தோல்நோய், இருதய நோய் மற்றும் பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் தூய்மைப் பணியாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. மேலும், அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள், பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.