டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஊராட்சி பகுதியில் எம்.பி. குறைகேட்பு

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

News image
பொதுமக்கள் குறைகேட்பு முகாமில் பேசுகிறாா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :21 ஏப்ரல் 2025, 7:44 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பொதுமக்களை சந்தித்து திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

மலையாம்பட்டி, வடுகம், பட்டணம் முனியப்பம்பாளையம், காக்காவேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து எம்.பி. ராஜேஸ்குமாா் குறைகேட்டாா். அப்போது ஊராட்சி பகுதியில் குடிநீா், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாகத் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பட்டணம் முனியம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் மோட்டாா் பழுதாகி இருப்பது அறிந்த எம்.பி. ராஜேஸ்குமாா், உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், இளைஞா்கள் விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து உடனடியாக விளையாட்டு உபகரணங்களை வழங்க உத்தரவிட்டாா். இந்த முகாமில் அரசு அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.