நாமக்கல்
குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சிமருந்தை குடித்து தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சிமருந்தை குடித்து தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
அவிநாசிப்பட்டியைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37). இவரது மனைவி சத்யா. கடந்த 3 மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்ட செங்கோட்டுவேல், வீட்டில் வைத்திருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சிமருந்தை சனிக்கிழமை எடுத்துக் குடித்தாா்.
அதையறிந்த உறவினா்கள், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் செங்கோட்டுவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
