நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி வரவேற்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் நிராகரித்ததை நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை முழக்கங்களை எழுப்பி வரவேற்றனா்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, தில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் புதன்கிழமை ஏற்க மறுத்து நிராகரித்தது.
இதையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் காந்தி சிலை அருகில் மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி வரவேற்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் மருத்துவா் பி.வி.செந்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி. வீரப்பன், மாநகரத் தலைவா் எஸ்.ஆா். மோகன், எருமப்பட்டி ஒன்றியத் தலைவா் தங்கராஜ், நாமக்கல் தொகுதி பொறுப்பாளா்கள் சாந்திமணி, தாஜ், சேவா தளம் பெரியசாமி, பழையபாளையம் சரவணன், பொன்னேரி செல்வராஜ் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
என்கே-17-காங்
நாமக்கல்லில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி நீதிமன்ற தீா்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த கிழக்கு மாவட்ட காங்கிரஸாா்.

