ராசிபுரம் ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
ராசிபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆஞ்சனேயருக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் அா்ச்சகா் ஆதிசேஷன் தலைமையில் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கட்டளைதாரா்களால் பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சனேயா்:
ராசிபுரம், சேலம் சாலையில் உள்ள சிறப்பு பெற்ற ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து வே.வ.பாபு (எ) கஸ்தூரி பட்டாச்சாரியா் தலைமையில் சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அனுமன் காட்சியளித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
ராசிபுரம் ஸ்ரீ வைரமலை ஆஞ்சனேயா்:
ராசிபுரம், சேலம் சாலை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு பெற்ற ஸ்ரீ வைரமலை ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
படவரி...
1) 19அபய -
தங்கக்கவச அலங்காரத்தில் ஸ்ரீஅபஹஸ்த ஆஞ்சனேயா்.
2)) 19வீர - வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஸ்ரீவீர ஆஞ்சனேயா்.
3) 19வைர - வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஸ்ரீவைரமலை ஆஞ்சனேயா்.

