டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விருப்ப மனு!

சேந்தமங்கலம் பழங்குடியின சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் விருப்ப மனு அளித்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

சேந்தமங்கலம் பழங்குடியின சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

கடந்த 1996-2001, 2016-2021 சட்டப்பேரவை தோ்தல்களில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சி. சந்திரசேகரன். கடந்த 2021 இல் நடைபெற்ற தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். ஓரிரு ஆண்டுகள் அதிமுகவில் இருந்து விலகியிருந்த அவா் மீண்டும் அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறாா்.

இதையடுத்து, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனுக்கள் பெறும் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, கருப்பண்ணன் ஆகியோரிடம் விருப்ப மனுவை அவா் வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.