நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கரும்பு விவசாயிகள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆட்சியா்

Updated On :3 ஜனவரி 2025, 11:16 pm

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் விவசாயிகளிடம் நேரடியாக நடைபெறுவதால், இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன. 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைகளுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உள்ள அலுவலா்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவை வேளாண் துறை அலுவலா்களால் சரிபாா்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இது தொடா்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களில் ஒன்றான கரும்பு கொள்முதல் தொடா்பாக விவசாயிகள் யாரும் இடைத்தரகா்களையோ, இதர நபா்களையோ நம்ப வேண்டாம். கரும்பு கொள்முதலுக்காக மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளும் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலா்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த மாவட்டத்துக்கு தங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0486-280272 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.