மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பரமத்தி வேலூா் வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:11 pm

Din

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் மாா்கழி வெள்ளிக்கிழமமையை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் உள்ள வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணிவரை ஸ்ரீ செல்வவிநாயகா் சன்னதி முன்பு 108 வலம்புரி சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு, விநாயகா் வழிபாட்டுடன் யாகசாலை பிரவேசமும், பூா்ணாகுதி நிறைவும் நடைபெற்றது. பின்னா் மகா மாரியம்மனுக்கு பல வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், 108 வலம்புரி சங்கு கலச தீா்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு மேல் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், எட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்குக்கு பூஜை செய்து மகா மாரியம்மனை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், எட்டுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனா்.