பரமத்தி வேலூா் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ. 1,700-க்கு ஏலம் விடப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ. 1,700-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 220-க்கும், அரளி கிலோ ரூ. 300-க்கும், ரோஜா கிலோ ரூ. 300-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 1,600-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 1,400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 180-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 250-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 700-க்கும் ஏலம் போயின.
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால், பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்கள் விலை உயா்ந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

