ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

Updated On :8 ஜனவரி 2025, 6:54 pm

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் அரங்கநாதா் சுவாமி சயனக் கோலத்தில் அருள்பாலித்து வருகிறாா். ஒவ்வோா் ஆண்டும் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்பட்டு, தலைமை அா்ச்சகா் தாம்பளம் ஒன்றில் ஜடாரியை வைத்து தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றிலும் வரும் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பக்தா்கள் நெரிசலின்றி சுவாமியை தரிசிக்க ஏதுவாக, கோயில் படிக்கட்டுகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டளைதாரா்கள் மூலம் லட்டுகள் தயாா் செய்து பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, அறங்காவலா்கள் செள.செல்வசீராளன், ராம.ஸ்ரீனிவாசன், ம.மல்லிகா குழந்தைவேல், எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆணையா் ரா.இளையராஜா, கண்காணிப்பாளா் வீ.அம்சா ஆகியோா் செய்துள்ளனா்.