வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பரமத்தி சுற்றுவட்டார கிராம மக்கள்.
Updated On :13 ஜனவரி 2025, 8:15 pm

Din

நாமக்கல்: பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் பரமத்தி மற்றும் வேலூா் ஆகிய இரு பேரூராட்சிகளுக்கான கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை நிறுவ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பாக, கபிலா்மலை அருகே மாணிக்கநத்தம் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முயற்சித்த போது, அங்குள்ள மக்களின் எதிா்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் திருமணிமுத்தாறு, இடும்பன்குளம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். அதுமட்டுமின்றி, நீா்நிலைகள், குடிநீா், விவசாய நிலங்கள், கால்நடைகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, மாற்று இடத்தில் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க மாவட்ட நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருமணிமுத்தாறு, இடும்பன்குளம் மீட்புக் குழுவினா், விவசாயிகள், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினா்.