

வெம்பக்கோட்டை அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், பள்ளியை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு லட்சுயாமிபுரம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் புதிதாக கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கல்குவாரி அமைக்க ஏற்கனவே தொடர்ந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குவாரி அமைக்க அனுமதி வழங்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆலங்குளம் சாலையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மாணவ மாணவியரும் பள்ளி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குவாரி அமைக்கப்பட்டால் குடியிருப்புகள் சேதமடையும் நிலை ஏற்படுவதுடன் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதார முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கூறும் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.