92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: வழக்குரைா்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பரமத்தி மற்றும் நாமக்கல் வழக்குரைஞா்கள்

News image
Updated On :21 ஜனவரி 2025, 9:44 pm

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பரமத்தி மற்றும் நாமக்கல் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

பரமத்தி மற்றும் வேலூா் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக பரமத்தி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாணிக்கநத்தம், இருக்கூா் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதியான பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இது குறித்த தகவல் அறிந்த இருக்கூா், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள், அப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில், பரமத்தி தேசிய நெடுஞ்சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனா். இந்த நிலையில், பரமத்தி, மாவுரெட்டி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கரைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைவதைத் தடுக்க தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் பரமத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.