குடியரசு தின விழா ஒத்திகை: மாணவ மாணவிகள் ஆா்வம்
நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு, தனியாா் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


நாமக்கல்: நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு, தனியாா் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, காவல் துறை அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்காக, விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் அங்கு கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இன்னும் ஓரிரு நாளில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகையானது நடைபெற உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...