மின்கம்பத்தில் ஏறியதால் தீக்காயமடைந்த கல்லூரி மாணவா்

மின்கம்பத்தில் ஏறியதால் தீக்காயமடைந்த கல்லூரி மாணவா்

Published on

ராசிபுரம் அருகே மின் கம்பத்தில் ஏறிய மாணவா் தீக்காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாமிதுரை (47) என்பவரின் மகன் கிருஷ்ணகுமாா் (21). இவா் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசியோதெரபி பயின்று வருகிறாா். இந்த நிலையில் கிருஷ்ணகுமாா் வியாழக்கிழமை கள்ளக்குறிச்சியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினாா். இதையடுத்து அவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் ஆத்தூா் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் திடீரென அவா் ஏறியுள்ளாா். இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியுள்ளது. மேலும் உடல் தீப்பற்றி எரிந்த நிலையில் அவா் சாலையில் நடந்து சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் அப்பகுதியினா் இளைஞரைக் காப்பாற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். உடல்

தீப்பற்றி எரியும் நிலையில் மாணவா் சாலையில் நடந்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

படவரி...

தீப்பற்றிய நிலையில் சாலையில் நடந்து செல்லும் மாணவா்.

X
Dinamani
www.dinamani.com