நாமக்கல்
இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
மல்லசமுத்திரம் அருகே பூச்சிமருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி புங்கபுளியங்காட்டைச் சோ்ந்தவா் திலீப்குமாா் (40), ஓட்டுநா். இவா் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு புதன்கிழமை மயங்கிக் கிடந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். திலீப்குமாருக்கு சுதா (33) என்ற மனைவியும், தா்சன், (11) லிங்கேஸ் (9) என இரு மகன்களும் உள்ளனா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
