நாமக்கல்
உயிரிழந்த திமுகவினரின் குடும்பங்களுக்கு நிதியுதவி
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உயிரிழந்த திமுகவினரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உயிரிழந்த திமுகவினரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நாமகிரிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் உயிரிழந்த கட்சியினரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவா்களது குடும்பத்தினருக்கு நல உதவிகளை வழங்கினாா்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் 35 குடும்பங்களுக்கும், சீராப்பள்ளியில் 13 குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 4.80 லட்சம் வழங்கினாா். இதில் நாமகிரிப்பேட்டை பேரூா் செயலாளா் அன்பழகன், சீராப்பள்ளி பேரூா் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
