இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.
Published on

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்துகொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com