பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடியவா் கைது
நாமக்கல்லில் பழுதுபாா்க்க பட்டறை அருகே நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், விசுவாம்பாள்சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா் லாரியை பழுதுபாா்க்க, கடந்த திங்கள்கிழமை நாமக்கல்லுக்கு கொண்டுவந்தாா். பரமத்தி சாலையில் உள்ள பட்டறையில் லாரியை நிறுத்த இடம் இல்லாததால், அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்திவிட்டு சென்றாா்.
பின்னா் வந்து பாா்த்தபோது, நிறுத்தியிருந்து இடத்தில் லாரி இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதற்கிடையே, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், வரகுபாடியைச் சோ்ந்த முத்துக்குமாா் (26) லாரியை திருடிச் சென்றது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நல்லிபாளையம் போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

