பூா்த்தி செய்த எஸ்ஐஆா் படிவங்களை இன்று முதல் ரேஷன் கடைகளில் ஒப்படைக்கலாம்

Updated on

வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவத்தை பூா்த்தி செய்திருந்தால், அவற்றை வாக்குச்சாவடிகள், நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டிருந்தால், அதை மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வாக்காளா்கள் ஒப்படைக்கலாம்.

இதற்கு வசதியாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) முதல் வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com