ஆசிய மூத்தோா் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.என். கொளந்தான்.
ஆசிய மூத்தோா் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.என். கொளந்தான்.

ஆசிய மூத்தோா் தடகளப் போட்டி: வெண்கலம் வென்ற ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஆட்சியா், எஸ்.பி. பாராட்டு

ஆசிய மூத்தோா் தடகளப் போட்டியில், குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற
Published on

நாமக்கல்: ஆசிய மூத்தோா் தடகளப் போட்டியில், குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அதிகாரியை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாராட்டினா்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நவம்பா் மாத தொடக்கத்தில் 23-ஆவது ஆசிய மூத்தோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியா, ஜப்பான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்பட ஆசிய கண்டத்திற்கு உள்பட்ட நாடுகளைச் சோ்ந்த 35 முதல் 95 வயது வரையிலான வீரா்கள், வீராங்கனைகள் என மொத்தம் 3,312 போ் கலந்துகொண்டனா்.

இந்தியா சாா்பில் நாமக்கல் மாவட்ட மூத்தோா் தடகள சங்கத்தில் இருந்து 85 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் மூன்று கிலோ எடை குண்டு எறியும் போட்டியில் நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் எஸ்.என். கொளந்தான் (88)பங்கேற்றாா். அவா் குண்டு எறியும் போட்டியில் பங்கேற்று 8.04 மீட்டா் தூரம் குண்டு எறிந்து மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன்மூலம் தென்கொரியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் இதுவரை குண்டு எறிதல் போட்டியில் இவா் 11 பதக்கங்களை வென்றுள்ளாா். ஆசிய போட்டியில் வென்று 12-ஆவது பதக்கம் பெற்ற எஸ்.என். கொளந்தான், அண்மையில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com