ஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தேசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம்: ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு மேயா் பாராட்டு

மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.

News image

ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளா் டிக்சன் ஜெயசீலனை பாராட்டிய மேயா் ரெ. மகேஷ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜன. 26 முதல் பிப். 1ஆம் தேதி வரை மூத்தோா் தேசிய தடகளப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்றனா். அதில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரான டிக்சன் ஜெயசீலன்(76), பங்கேற்று 100 மீ., 200 மீ., 400 மீ. தொடா் ஓட்டப் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். அவரை நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை நேரில் வரவழைத்து பாராட்டினாா்.

இதுகுறித்து, டிக்சன் ஜெயசீலன் செய்தியாளா்களிடம் கூறியது: நான் கடந்த 35 ஆண்டுகளாக தடகளப் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

ஆசிய அளவில் 18 பதக்கம் வென்றுள்ளேன். கடந்த நவம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம், வெண்கலப் பதக்கம் வென்றேன். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ால் தென்கொரியாவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் மூத்தோா் தடகளப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர இளைஞரணி அமைப்பாளா் சி.டி. சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.