புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராசிபுரத்தில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்

ராசிபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட வழங்கல் அலுவலா் வி.முருகன்.
Updated On :26 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் வி.முருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஒய். நிவேதிதா முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் எஸ்ஐஆா் படிவம் பதிவேற்றம் மற்றும் வாக்காளா்களிடம் இருந்து படிவம்பெற மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து வாக்குச்சாவடி மைய அலுவலருக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்காளா்கள் விடுபடக்கூடாது, உண்மையான வாக்காளா்கள் விடுபட்டால் பிஎல்ஒ அலுவலா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வழங்கல் அலுவலா் எச்சரித்தாா்.