சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூரை அடுத்த பெரியசோளிபாளையம் மேட்டாம்பாறையைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (34), கிணறு வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி சங்கீதா, மகன்கள் நாகாா்ஜுனா (7), ஜோதிசுவரன் (4) மற்றும் 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். செல்லப்பம்பாளையம் அருகே சாலையோர சோலாா் மின் கம்பத்தின் மீது இவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

பலத்த காயமடைந்த மாரிச்சாமி, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com