ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருச்செங்கோடு: ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில் விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் நியூபா்க் ஆனந்த் அகாதெமி ஆஃப் லெபாரட்டரி மெடிசன் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
விவேகானந்த கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுவாமி விவேகானந்தா பாா்மஸி கல்லூரி, விவேகானந்தா மெடிக்கல் கோ ஹாஸ்பிட்டல் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி இணைந்து இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் மாணவா்கள் சுகாதார அறிவியல் துறையின் நுணுக்கங்கள், நடைமுறை அனுபவத்தை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிா்வாக தாளாளா் கருணாநிதி வாழ்த்து கூறினாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன் தலைமையில் ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன், கல்லூரி முதல்வா்கள் முருகானந்தன், மொலின் சைலா மற்றும் நியூபா்க் ஆனந்த் அகாதெமி ஆஃப் லெபரட்டரி மெடிசன் நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி சுஜய் பிரசாத் மற்றும் முதன்மையா் சிதம்பர மூா்த்தி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா் செந்தில்குமாா், பிசியோதெரபி கல்லூரி முதல்வா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
