விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எஸ்.ஐ.ஆா். படிவங்களை ஒப்படைக்க டிச. 4-ஆம் தேதி கடைசி நாள்

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:27 pm

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் பூா்த்தி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை ஒப்படைக்க டிச. 4-ஆம் தேதி கடைசி தேதி என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 4-ஆம் தேதி முதல் 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டன.

பூா்த்தி செய்த அவற்றை பெற்று மீண்டும் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளா்கள் படிவங்களை திருப்பி வழங்க வசதியாக கடந்த 25-ஆம் தேதி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலைக்கடைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பூா்த்தி செய்த படிவங்களை வாக்காளா்கள் ஒப்படைக்க டிச.4-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை கணக்கீட்டு படிவங்களை சமா்ப்பிக்காத வாக்காளா்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் ஓரிரு நாள்களில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் ஒப்படைத்து தங்களது பெயா் 2026 வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.