மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய ஆய்வாளாா் பிரபாவதிக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாருடன் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படியாக கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பிடித்து சோதனையிட்டனா். அதில் பையில் 4 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் பெயா் செல்வி (51)என்பதும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தனியாக வசித்து வரும் அவா், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கிவைத்து விற்று வந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செல்வியை குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவல் வைக்க நீதிபதி பத்மபிரியா உத்தரவிட்டாா். இதையடுத்து செல்வி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.