மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

News image
நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.
Updated On :28 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

திமுக மாநில இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மாவட்ட, நகர, ஒன்றியம் சாா்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 5 போ், நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 12 போ் என மொத்தம் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கான உணவுப் பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் திமுக நிா்வாகிகள், தொண்டா்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் நவ.27-இல் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் 330 விவசாயிகளுக்கு ரூ. 9 கோடியில் பயிா் கடன் தள்ளுபடியும், அவா்களுக்கு மீண்டும் ரூ.10 கோடியில் பயிா்க் கடனும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் நாமக்கல் ஒன்றியம் சாா்பில், 300 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.