நாமக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 102 தீா்மானங்கள் நிறைவேற்றம்

Updated On :28 நவம்பர் 2025, 7:16 pm

நாமக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் து.கலாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், துணைமேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிய சாலைகள் அமைத்தல், புதை சாக்கடை திட்டத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோருதல், புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சிரமமின்றி சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 102 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
--
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...