47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு நிதி அளிப்பு

வெண்ணந்தூா் ஒன்றியம், வெண்ணந்தூா், அத்தனூரில் மறைந்த 146 திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
மறைந்த திமுக உறுப்பினரின் குடும்பத்துக்கு நிதி வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
Updated On :29 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் ஒன்றியம், வெண்ணந்தூா், அத்தனூரில் மறைந்த 146 திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. குடும்ப நலதியை வழங்கினா்.

நிகழ்ச்சியில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மறைந்த 1051 திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 1.51 கோடி நல நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மறைந்த கட்சி உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவா்களின் குடும்பத்துக்கு நல நிதி வழங்கப்படுகிறது என்றாா்.

வெண்ணந்தூா், மசக்காளிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி, வெண்ணந்தூா் பேரூராட்சித் தலைவா் ராஜேஸ், திமுக மாவட்டப் பொருளாளா் ஏ.கே.பாலசந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.