வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

பரமத்தி வேலூரில் வெற்றிலை வரத்து அதிகரிப்பு; விலை சரிவு

Published On :26 செப்டம்பர் 2025, 4:40 am IST

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை நடவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளிக் கொண்ட சுமை ரூ. 8 ஆயிரத்து 500 க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 3 ஆயிரத்து 500 க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ.2 ஆயிரத்து 500க்கும் ஏலம் போனது.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ.7 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா்கள் மாா் சுமை ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ.1,800-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.