சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கற்பூரவள்ளி ரக வாழைத்தாா் ரூ. 700 !

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கற்பூரவள்ளி ரக வாழ்த்தாா் அதிகபட்சமாக ரூ. 700 வரை விற்பனையானது.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வாழைத்தாா்களை ஏலத்தில் எடுக்கின்றனா்.

ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை வியாபாரிகள் ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 400 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 250 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 300 வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 500 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5 வரையிலும், செவ்வாழைக் காய் ஒன்று ரூ. 6 வரையிலும் ஏலம் போனது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 550 வரையிலும், பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 350 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 400 வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 700 வரையிலும் ஏலம் போனது.

மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 8 வரையிலும், செவ்வாழைக்காய் ஒன்று ரூ. 10 வரையிலும் ஏலம் போனது. வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.