வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 450!

பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450 க்கு விற்கப்பட்டது.

News image

வாழைத்தாா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 3:25 am IST

பரமத்தி வேலூா் வாழைத்தாா் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450 க்கு விற்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம் குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். சேலம், நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் வியாபாரிகள் வாழைத்தாா்களை வாங்கி ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 350 வரை விற்பனையானது. அதேபோல பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 250க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 300 வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 400 வரையிலும் விற்பனையானது. அதேபோல ஒரு மொந்தன் வாழைக்காய் ஐந்து ரூபாய்க்கும், செவ்வாழைக் காய் ஒன்று எட்டு ரூபாய்க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ஒன்று அதிகபட்சமாக ரூ. 450க்கு விற்கப்பட்டது. பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 300 க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ. 350க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ஒன்று ரூ. 400 வரையிலும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7 வரையிலும், செவ்வாழைக் காய் ஒன்று ரூ. 10 வரையிலும் ஏலம் போனது. தற்போது முகூா்த்தம் மற்றும் அமாவாசையையொட்டி வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வாழைத்தாா்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.