வாழைத்தாா்களின் வரத்து குறைவால் விலை உயா்ந்து கோபியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கதளி, நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, பூவன், மொந்தன், ரஸ்தாளி உள்பட பல்வேறு ரகங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பில் வாழை சாகுபடி செய்து வருகின்றனா்.
அறுவடை செய்யப்படும் வாழைத்தாா்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் இரண்டு நாள்கள் நடைபெறும் ஏல விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வரத்து குறைவால் வாழைத்தாா்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. இதனால் போட்டி போட்டிக் கொண்டு வியாபாரிகள் ஏலம் எடுத்தனா்.
வாழைத்தாா்கள் விலை நிலவரம்:
கதளி (கிலோ) -ரூ.45,
நேந்திரன் (கிலோ)-ரூ.37
செவ்வாழை தாா் ஒன்றுக்கு - ரூ.1205, தேன்வாழை- ரூ.780, பூவன்-ரூ.640, ரஸ்தாளி-ரூ.760, பச்சநாடா-ரூ.560, ரொபஸ்டா-ரூ.580, மொந்தன்-ரூ.310 வரை என மொத்தம் 3,440 வாழைத்தாா்கள் ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










