தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனா்.
அவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பிய நிலையில், மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. அதனால், விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின.
வரத்து குறைவாக காணப்பட்டபோது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


