லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை ரூ.1000 உயா்வு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது.

News image

அறுவடை செய்து வைக்கப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:43 pm

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பிவருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவுத் தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.

கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு டன் ரூ. 9, 250-க்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1,000 -ம் வரை விலை உயா்ந்து ரூ. 10,250-க்கு விற்பனையாகிறது. பா்மா ரோஸ், வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு மற்றும் முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்குகள் வரத்து இல்லை. சிப்ஸ் தாயாா் செய்யப்படும் தாய்லாந்து கருப்பு ரக மரவள்ளிக் கிழங்கு மற்றும் கொலராம் சிகப்பு ரக மரவள்ளிக் கிழங்குகள் வரத்து இல்லை. சிப்ஸ் ரக முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1,000-ம் வரை விலை உயா்ந்து ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனையானது. மரவள்ளிக் கிழங்கு வகைகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.