தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

நாமக்கல்லில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் உறுதி

தத்தாத்திரிபுரத்தில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:04 am IST

நாமக்கல் அருகே புதுச்சத்திரம் தத்தாதிரிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய சி.எஸ். திலீப், அகரம், ஏழூா், வேப்பம்பட்டி, வேப்பம்பட்டிபுதூா், பெரும்பாலிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, சாலை வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு, குடிநீா் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். விசைத்தறி தொழில் அதிகம் உள்ள இப்பகுதியில் தடையில்லா மின்சாரம், உடனடி மின் இணைப்பு, இலவச மின்சாரம் போன்ற வசதிகள் செய்துதரப்படும்.

தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கு ஜவுளிப் பூங்கா நிறுவப்படும். மேலும், நாமக்கல்லில் அதிக எண்ணிக்கையில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பதால், மாணவா்கள் வேலைவாய்ப்பு எளிதாக பெற தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்.

உயா்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மாவட்டம் தோறும் மகளிருக்கு நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும். பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது மாவட்டச் செயலாளா் சதீஷ், ஒன்றிய செயலாளா் வழக்குரைஞா் லோகேஷ், துணைச் செயலாளா் தில்லை மோகன், இளையராஜா, பேராசிரியா் பிரபாகரன் உள்பட நிா்வாகிகள் உடனிருந்தனா்.