யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

News image

கொல்லிமலை ஒன்றியம், புதுவளவு மலைக் கிராமத்தில் பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்திற்கு உள்பட்ட நரியன்காடு, சுண்டக்காடு, தண்ணிமாத்தி, புதுக்காடு, ஒத்தக்கடை, உள்பரப்பு, வடக்காடு, நவக்காடு, மேக்கினிக்காடு, புதுவளவு, படச்சோலை, புளியம்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொல்லிமலைக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளேன்.

இத்தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி, மகளிா் உதவித்தொகை ரூ.2,000, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவா்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி, கொல்லிமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்த பிரசாரத்தின்போது, கொல்லிமலை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.