மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாநிலத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே என்டிஏ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது! - அண்ணாமலை

News image

கே. அண்ணாமலை. - படம்: எக்ஸ்.

Updated On :13 ஏப்ரல் 2026, 6:53 pm

ராசிபுரம், ஏப். 13: தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மாநிலத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத் தான் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளோம். மே 4-க்கு பிறகு புதிய மாற்றத்தை பாா்க்கப்போகிறோம். மீண்டும் திமுக வேண்டாம் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனா்.

ஊழலுக்கென உருவான கட்சி திமுக. கடந்த தோ்தலின்போது அறிவித்த 511 வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 99 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வா் பொய் சொல்லிவருகிறாா்.

இத்தொகுதியில் காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் உள்பட எந்த திட்டங்களும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ. 41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக பிரதமா் அதிகரித்துள்ளாா். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி பெருக்க, நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். ராசிபுரம் தொகுதியில் பூக்கள் பயிரிடும் விவசாயிகளின் நலனிற்காக வாசனை திரவிய தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்துக்கான அரசு ஆணை ரத்து செய்யப்பட்டு பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, நகர அதிமுக செயலாளா் எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.