மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

News image

திருச்செங்கோடு நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஈஸ்வரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:22 pm

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். இவா் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் 165 முறை தொகுதி வளா்ச்சிக்காக சட்டப் பேரவையில் பேசி ரூ. 2 ஆயிரம் கோடி அளவில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். நான் மீண்டும் வெற்றிபெற்றால் திருச்செங்கோடு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும். மேலும், முதல்வா் ஸ்டாலின் அறிவித்த தோ்தல் வாக்குறுதியான ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.